பங்கோங் ஏரியில் பெரும் அளவில் சீனப்படைகள் குவிப்பு-போர் பதற்றம் தொடர்கிறது

இந்திய சீன எல்லையில் பிரச்சனை நடக்கும் மற்றும் ஒரு இடம் தான் இந்த பங்கோங் ஏரிப் பகுதி.கல்வான் ஆறு பகுதிக்கு பிறகு தற்போது சீனா இங்கு அதிக அளவலான படைகளை குவித்துள்ளது.ஆறு வாரங்கள் நேரம் எடுத்து மெதுவாக பல பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளது.அமைதி குறித்த பேச்சுவார்த்தை நடந்தாலும் இனி சீனாவை இந்த இடத்தை விட்டு வெளியேற்றி அகற்றுவது கடினமான பகுதியாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லோருடைய கவனமும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பெரிய நிரந்தர கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தன்னுடையது என கூறிவரும் பகுதியில் ஐந்து கிமீக்குள் இந்த கட்டுமானத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது.ஃபிங்கர் 4 பகுதிக்கு ரோந்து சென்ற இந்திய வீரர்களை மே5 அன்று சீன வீரர்கள தடுத்த பிறகு ஒரு மாதத்தில் இந்த கட்டுமானத்தை சீனா கட்டி முடித்துள்ளது.

ஃபிங்கர் 4 பகுதியில் உயரத்தில் இந்த கட்டுமானங்களை சீன கட்டியுள்ளதால் அந்த பகுதியில் மொத்த ஏரியாவையும் சீனாவால் ஆதிக்கம் செலுத்த முடியும்.இதன் மூலம் இந்திய வீரர்களால் அங்கு ரோந்து செல்வது சிரமம் ஆகிறது.

2017ல் ஃபிங்கர் 4 பகுதியில் இந்திய சீன வீரர்கள் கற்கலால் தாக்கி சண்டையிட்டது நமக்கு நியாபகம் இருக்கலாம்.அந்த பகுதியில் உள்ள ஏரி கரையில் தற்போது சீனா கப்பல் நிறுத்தும் இடம் மற்றும் ஒரு நிர்வாக பிரிவை ஏற்படுத்தியுள்ளது.அங்கு இந்திய வீரர்கள் செல்வதை தடுத்து இரு இடைமறிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒரு மெட்டல் கற்கள் சாலையும் சீனா ஏற்படுத்தி விட்டது.

இனி இந்திய வீரர்கள் காலம் காலமாக பிங்கர் 4 பகுதியை ரோந்து செய்ய பயன்படுத்திய பகுதிகளை பயன்படுத்த முடியாது.பிங்கர் 4 பகுதியில் உள்ள மலை உச்சிகளில் பங்கர்களை ஏற்படுத்தியுள்ளது.இதன் மூலம் பிங்கர் 4 பகுதிகளில் சீனாவால் ஆதிக்கம் செலுத்த முடியும்.