சீன குண்டுவீச்சு விமானத்தை இடைமறித்த ஜப்பானிய விமானப்படை !!

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on சீன குண்டுவீச்சு விமானத்தை இடைமறித்த ஜப்பானிய விமானப்படை !!

சீன விமானப்படைக்கு சொந்தமான ஹெச்6-கே ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று ஜப்பானுடைய ஒகினாவா மற்றும் மியாகோ தீவுகளுக்கு இடையே உள்ள சர்வதேச வான்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ஜப்பானிய விமானப்படையால் இடைமறிக்கபட்டதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால் இந்த விமானம் ஜப்பானிய வான் எல்லைக்குள் நுழையவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சீன குண்டுவீச்சு விமானம் நீண்ட தூர தாக்குதல்களை நடத்த கூடிய திறன் கொண்டது. அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது. அணு ஆயுத தாக்குதல் நடத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முந்தைய வடிவங்கள் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை சுமக்காது.ஆனால் இந்த விமானம் ஆறு ஒய்.ஜே12 மற்றும் 7 க்ருஸ் ஏவுகணைகளை சுமக்கும் திறன் கொண்டது.

இத்தகைய 18 விமானங்கள் கொண்ட ஓர் படையணி நூற்றுக்கணக்கான ஒய்.ஜே12 ஏவுகணைகளால் எதிரி கடற்படையணியை தொலைதூரத்தில் இருந்து தாக்கும் திறனை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.