1 min read
இந்திய எல்லை அருகே சீன ராணுவம் போர் ஒத்திகை !!
சீனாவின் அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பல ஆயிரம் சீன துருப்புகள் சீனாவின் மையப்பகுதியில் இருந்து மேற்கு எல்லையோர மாகாணத்திற்கு வெற்றிகரமாக நகரத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சில மணி நேரங்களில் விமானப்படையின் உதவியோடு பல ஆயிரம் வீரர்கள், நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள், மிகப்பெரிய அளவில் சப்ளை பொருட்கள் ஆகியவை வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த பயிற்சியின் மூலமாக சீன ராணுவம் தேவைப்படும் போது எல்லை பகுதிகளில் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.