பிபி-14க்கு ரோந்து செல்லும் வழியை நிரந்தரமாக மறைத்த சீன இராணுவம்; பேச்சுவார்த்தைக்கு மத்தியில் சீனாவின் செயல்

  • Tamil Defense
  • June 26, 2020
  • Comments Off on பிபி-14க்கு ரோந்து செல்லும் வழியை நிரந்தரமாக மறைத்த சீன இராணுவம்; பேச்சுவார்த்தைக்கு மத்தியில் சீனாவின் செயல்

கல்வான் பகுதியில் இந்திய இராணுவம் பிபி-14 பகுதிக்கு எப்போதும் ரோந்து செல்லும் பகுதியை சீன இராணுவம் வழிமறித்து அங்கு பங்கர்களை அமைத்துள்ளது.இதன் மூலம் கல்வான் மற்றும் ஸ்யோக் சந்திக்கும் ‘Y ‘ வடிவ ஆற்று முனை புதிய போர்முனையாக உருவாகியுள்ளது.

கல்வான் ஆறு திரும்பி ஸ்யோக் ஆற்றை சந்திக்கும் அந்த ‘Y’ வடிவ பகுதியில் சீனா மிக விரைவாகவே தனது வீரர்களுக்காக கடினமான ஷெல்டர்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்திவிட்டது.இதன் மூலம் பிபி14க்கு ரோந்து செல்ல இந்திய வீரர்கள் பல வருடங்களாக பயன்படுத்திய 1கிமீ வழியை இனி உபயோகிக்க முடியாது என்ற நிலை ஏற்படுட்டுள்ளது.

இதே ஆற்று முனை பகுதியில் இந்தியாவும் வீரர்களை குவித்துள்ளது.அதாவது சீன வீரர்கள் நமது வீரர்களுக்கு மிக அருகிலேயே அவர்களது நடமாட்டத்தை காணும் அளவுக்கு நெருங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பேச்சுவார்த்தையில் விலகி செல்வது என முடிவு எடுத்தாலும் சீனர்களின் சத்தியத்தை என்றைக்குமே நம்ப முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எகானமிக் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, கனரக கட்டுமான தளவாடங்களை கொண்டு வந்து சீனா மிக விரைவிலேயே அதிக கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள பொதுமக்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.அதாவது பகல் கவிழ்ந்து இருள தொடங்கியதும் அங்கு சீன கேம்புகள் பெரிய அளவில் தென்படுவதாகவும் லைட் வெளிச்சங்கள் தென்படுவதாகவும் கூறியுள்ளனர்.

கிழக்கு லடாக்கின் டங்ஸ்டே தொகுதி கௌன்சிலர் ஒருவர் தெரிவித்த தகவல்படி, இராணுவத்துடன் பணிபுரியும் போர்ட்டர்கள் மற்றும் மற்ற பணியாளர்களும் அதிக அளவில் சீனப்படைகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.பிபி-14 பகுதியில் படைக்குவிப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வியூக முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் அமைக்கப்படுவதாகவும் அதன் மூலம் இந்த பகுதியில் சீனப்படைகள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த சீனப்படைகளுக்கு பின்புலமாக கல்வான் பள்ளத்தாக்கின் சீனப்பகுதிக்குள் மாபெரும் படை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பின்வாங்குதல் என்னவானது?

பின்வாங்குதல் நாம் நினைத்ததை விட நீண்ட காலம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பங்கோங் ஏரி பகுதியில் இந்திய பகுதியான ( ஃபப்பர் ஷோன்) பிங்கர் 4 பகுதியில் சீன இராணுவம் அமைத்த நிலைகளையும் விட்டு வெளியேறவில்லை.

கல்டட்,மான் மற்றும் மீரக் கிராமவாசிகள் பிங்கர் 4 பகுதிக்கு சீனர்கள் அதிக படகுகளில் வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.மேலும் அந்த பகுதியில் இருந்து பிங்கர் 4 வரை சீனர்கள் சாலை அமைத்துள்ளதாக கிராமவாசிகள் கூறியுள்ளனர்.

சீனா இந்த கட்டுமானங்களை விட்டு விலகும் என தோன்றவில்லை நண்பர்களே…!