எல்லையில் இருந்து 35 கிமீ தொலைவில் பறக்கும் சீன போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • June 2, 2020
  • Comments Off on எல்லையில் இருந்து 35 கிமீ தொலைவில் பறக்கும் சீன போர் விமானங்கள் !!

அக்ஸாய் சின் பகுதியில் இந்திய பகுதியிலிருந்து சுமார் 100 முதல் 150கிமீ தொலைவில் உள்ள ஹோட்டன் மற்றும் கர்குன்ஸா ஆகிய இடங்களில் சீன விமானப்படை தளங்கள் உள்ளன.

இந்த படைதளங்களில் சீன விமானப்படையின் ஜே11 மற்றும் ஜே7 ஆகிய விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் தற்போது இந்திய பகுதியில் இருந்து 30 முதல் 35கிமீ தொலைவு வரை பறந்து வருகின்றன.

இந்திய விமானப்படையும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு எல்லையோர பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்களையும் இந்தியா பயன்படுத்தி வருகிறது.

மே மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய எல்லைக்குள் சீன ஹெலிகாப்டர் ஊடுருவி வந்ததை அடுத்து நமது சு30 போர் விமானம் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.

மேற்குறிப்பிட்ட ஹோட்டன் மற்றும் கர்குன்ஸா ஆகிய படைத்தளங்களில் முன்னர் பாகிஸ்தான் விமானப்படை மற்றும் சீன விமானப்படை ஆகியவை இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.