பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன விமானப்படை விமானம் !!

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன விமானப்படை விமானம் !!

இந்திய விமானப்படை பாகிஸ்தான் விமானப்படை தளங்களை கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கர்து விமானப்படை தளத்திற்கு சீன விமானப்படையின் டேங்கர் விமானம் ஒன்று சென்றதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. அதை போலவே கிழக்கு லடாக்கிலும் சீன விமானப்படை செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

திபெத்தில் உள்ள ஹோட்டன் விமானப்படை தளத்திற்கு கூடுல் சு27 போர் விமானங்களை சீன விமானப்படை அனுப்பி உள்ளது.

சீன விமானப்படைக்கு இந்திய எல்லையோரம் உள்ள தளங்கள் பயன்பாட்டு ரீதியாக பெரிய அளவில் உபயோகம் இல்லை காரணம் இவை அதூக உயரத்தில் அமைந்துள்ளதால் சீன போர் விமானங்களால் மூழு திறனுடன் செயல்பட முடியாது.

ஆனால் இந்திய விமானப்படை தளங்கள் சமவெளி பகுதிகளில் இருப்பதால் சீன விமானப்படையை விட மிகப்பெரிய சாதகம் நமக்கு உள்ளது.

அதே நேரத்தில் ஸ்கர்து விமானப்படை தளம் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது. இது தாழ்வான பகுதியில் உள்ளதால் சீன விமானப்படை இந்த தளத்தை உபயோகிக்க முயற்சிக்கலாம். ஸ்கர்து தளத்தில் இருந்து ஶ்ரீநகர் தளம் வெறுமனே 100கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் சீன விமானப்படையால் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது ஆகவே இந்திய விமானப்படை விழிப்புடன் கண்காணித்து வருகிறது.