
இந்தியா டுடே உடனான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மூத்த ஊடகவியலாளர் கார்டன் சாங் தனது தோல்விகளை முடி மறைக்கவே சீனா இந்தியா கஜகாஸ்தான் தைவான் போன்ற நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும் இந்த நகர்வுகள் கொரோனா காரணமாக சீனாவின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் அதிருப்தியில் இருந்து திசை திருப்ப உதவும் என்கிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தன்னிடமே பெரும்பாலான அதிகாரங்களை வைத்து இருப்பதால் தோல்விகளுக்கு பழிசுமத்த யாரும் இல்லை இதன் காரணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்திருக்கும் அதிருப்தியை சரி செய்ய இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறுகிறார்.
அதாவது ஏதேனும் நாட்டுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு சிறு பகுதியை அபகரித்து விட்டு அதனை வெற்றியாக காட்டி திசை திருப்பும் செயல் என கார்டன் சாங் கூறுகிறார்.