சீனா முந்தைய ஒப்பந்தங்களை மதித்து செயல்பட வேண்டும் மாறாக நிலைமையை மோசமாக்க கூடாது : இந்தியா !!

  • Tamil Defense
  • June 26, 2020
  • Comments Off on சீனா முந்தைய ஒப்பந்தங்களை மதித்து செயல்பட வேண்டும் மாறாக நிலைமையை மோசமாக்க கூடாது : இந்தியா !!

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சீீனா முந்தைய காலங்களில் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மதித்து செயல்பட வேண்டும் எனவும் மாறாக பிரச்சினையை மோசமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா செய்தியாளர்கள் இடையே பேசுகையில் சீனா நிலைமையை மோசமாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அது போன்ற ஒரு செயல் தான் கல்வான் மோதலுக்கு வித்திடடதாகவும், சீனா தொடர்ந்து படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

இந்திய சீன ராணுவ தளபதிகள் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் படைகளை பின்வாங்க ஒப்பக்கொண்ட பிறகும் சீனா தொடர்ந்து படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சக துணை செயலர் நவீன் ஶ்ரீவாஸ்தவா மற்றும் சீன வெளியுறவு தறை உயரதிகாரியான ஹாங் லியாங் ஆகியோர் சந்தித்து பேசிய போது பிரச்சினையை சுமுகமான முறையில் முடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே சீன பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளதாக்கு சீனாவுடையது என தெரிவித்து இருந்தது.

இந்த செயல் சமாதான பேச்சவார்த்தைகளை சீர்குலைப்பது மட்டுமில்லாமல் எல்லையில் சீனாவின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.