சென்காகு தீவுகளின் பெயரை மாற்றும் ஜப்பான், கப்பல்களை அனுப்பிய சீனா !!

  • Tamil Defense
  • June 23, 2020
  • Comments Off on சென்காகு தீவுகளின் பெயரை மாற்றும் ஜப்பான், கப்பல்களை அனுப்பிய சீனா !!

ஜப்பானின் தென்கோடி பகுதியில் உள்ள தீவுக்கூட்டங்கள் சென்காகு ஆகும். இந்த பகுதி ஜப்பான் கட்டுபாட்டில் இருந்தாலும் சீனா தொடர்ந்து இந்தபகுதி தன்னுடையது என உரிமை கோரி வருகிறது.

சமீபத்தில் இந்த தீவுகளின் நிர்வாகத்திற்கு பொறுப்பான ஒகினாவா நகர கவுன்சில் இந்த தீவுகளின் பெயரை வெறும் சென்காகு என்பதில் இருந்து டொனோஷிரோ சென்காகு என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

இதனையடுத்து சீனா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில் ஜப்பானின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் சீனாவின் இறையாண்மையை கேள்வி குறியாக்கும் எந்த நடவடிக்கையையும் சீனா பொறுத்துக்கொள்ளாது எனவும் கூறியுள்ளார்.