லடாக்கில் கனிமவளம் நிறைந்த பகுதியை குறிவைக்கும் சீனா !!

  • Tamil Defense
  • June 2, 2020
  • Comments Off on லடாக்கில் கனிமவளம் நிறைந்த பகுதியை குறிவைக்கும் சீனா !!

லடாக்கில் ஏறத்தாழ ஒரு மாத காலமாக இந்தியா சீனா இடையேயான மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது சமீபத்தில் வெளியாகி உள்ள சில செயற்கைகோள் புகைப்படங்கள் இந்திய பகுதியில் இருக்கும் ஒரு மலைக்கு நேராக சுமார் நான்கு கிலோமீட்டர் நீளம் கொண்ட தார் சாலையை சீனா கட்டமைத்து உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சாலை கனரக வாகன போக்குவரத்திற்கு ஏற்றதாக இருப்பதாகவும் மேற்குறிப்பிட்ட மலைப்பகுதி தங்க கனிமத்தை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சாலையானது சீனா பல வருடங்களாக கட்டி வரும் முக்கிய சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவான போக்குவரத்திற்கு இது உதவும் எனவும் கூறப்படுகிறது.

மறுபுறம் இந்திய பகுதியில் உள்ள இந்த மலைக்கு செல்ல எந்தவித உள்கட்டமைப்பு வசதிகளையும் இந்திய அரசு செய்யவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான செய்தியாகும்.