தெஸ்பங் பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியதா? புதிய போர்முனை திறந்த சீனா;அங்கு நடப்பது என்ன ?

  • Tamil Defense
  • June 26, 2020
  • Comments Off on தெஸ்பங் பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியதா? புதிய போர்முனை திறந்த சீனா;அங்கு நடப்பது என்ன ?

இந்திய சீன எல்லையான தெஸ்பங் என்னுமிடத்தில் சீனா தனது இராணுவத்தை குவித்துள்ளது.கல்வான்,பாங்கோங் பகுதிக்கு அடுத்தபடியாக புதிய மோதல் முனையான தெஸ்பங் சமவெளி மாறியுள்ளது.இராணுவ தளபதியின் இரு நாள் லடாக் பயணத்தில் எல்லைப்பகுதி வீரர்கள் தயார் நிலையை ஆய்வு செய்தார்.இதில் வடக்கு பகுதியில் தௌதல் பெக் ஓல்டி முதல் தெஸ்பங் வரையிலும் தெற்கு பகுதியில் தெம்சோக் முதல் சுமர்பகுதி வரையில் உள்ள 65 பாயிண்டுகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்த கூறியுள்ளார்.

இந்த பகுதியில் திடீர் சீனத் தாக்குதலை சமாளிக்க இந்தியாவும் அதிக அளவிலான வீரர்களையும் கனரக ஆயுதங்களையும் குவித்துள்ளது.

விமானப்படையின் தொடர் கண்காணிப்பு

16,000 அடி உயரத்தில் உள்ள தெஸ்பங் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு சீனப்படையினர் இந்திய எல்லைக்குள் ஆழ ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர்கள் மேலும் ஊடுருவுவதை தடுக்க இந்தியா தகுந்த அளவு படையை குவித்துள்ளது.

சீனா இந்த பகுதியில் 10000வீரர்களை குவித்துள்ளது.தனது 4வது மற்றும் 6வது மோர்ட்டார் இன்பான்ட்ரி டிவிசன்களில் இருந்து ஆர்டில்லரி மற்றும் டேங்குகளை சீன இராணுவம் இந்திய எல்லைக்கு அருகே குவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே மூன்று மேலதிக டிவிசன்களை ( ஒவ்வொன்றும் 10-12000 வீரர்கள் ) லடாக்கிற்கு அனுப்பியுள்ளது.தவிர டேங்க் மற்றும் ஆர்டில்லரிகளையும் அனுப்பியுள்ளது.மேலதிக வீரர்கள் ஏற்கனவே தயார் தயார் நிலையில் உள்ளன.தவிர லடாக் ஸ்கௌட் மற்றும் ஐடிபிபி படைப் பிரிவுகள் தயார் நிலையில் உள்ளன.

மலைசார் போர்முறைக்கு நமது வீரர்கள் கிட்டத்தட்ட தயார் நிலையிலேயே உள்ளனர்.லடாக் பகுதியில் தொடர்ந்து போர்விமானங்கள் (ஆயுதங்களுடன்) பறந்து வருகின்றன.இந்த தெஸ்பங் ஏரியாவின் “பாட்டில்நெக்” பகுதிக்கு அருகே சீன இராணுவம் முகாம் அமைத்துள்ளது உண்மையாகவே இந்தியாவிற்கு கவலையை அதிகரித்துள்ளது.தௌலத் பெக் ஓல்டி மற்றும் காரகோரம் பகுதிக்கு செல்லும் இரண்டே சாலைகளுக்கு அருகே தடை ஏற்படுத்த இந்த படைக்குவிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.அந்த பகுதியில் ரோந்து செல்லும் இந்திய வீரர்களை தடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிபிஓ பகுதியில் உள்ள ஒரு வான்ஓடு தளத்தை இந்தியா மறுபடியும் இயக்க தொடங்கியது சீனாவுக்கு கவலை அளித்திருக்க வேண்டும்.ஏனெனில் எல்லைக்கு 7கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த தளம் மொத்த மூலம் மொத்த காரகோர கணவாய் பகுதியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும்.

உலகின் அதிக உயரத்தில் அதாவது 16614 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஓடுதளத்தில் இந்திய விமானப்படை தொடர்ந்து ஏஎன்32 மற்றும் சி-130ஜே விமானங்களை தொடர்ந்து இயக்குகிறது.

ஏற்கைவே 2013ல் இந்தியாவும் சீனாவும் இந்த பகுதியில் மோதிக்கொண்டது.19கிமீ வரை இந்திய பகுதியில் சீனா இராணுவம் நுழைந்தது.அதன் பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 21 நாள்கள் கழித்து பிரச்சனை தீர்க்கப்பட்டது.

லடாக்கின் சியாச்சின்-சால்டாரோ முகடு பகுதியில் உள்ள இந்திய படைகள் தான் மேற்கில் இருந்து பாக்கும் கிழக்கில் இருந்து சீனப்படைகளும் இணைந்து விடாமல் தடுக்கின்றன.அவை இணைந்துவிட்டால் மொத்த லடாக் பகுதிக்கும் அச்சுறுத்தல் தான்.

சிபெக் திட்டத்தின் கீழ் சீனாவும் பாக்கின் கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதன் நிலையை அதிகரித்து வருகின்றது.