சுசூல் என்னுமிடத்தில் அதிக அளவு படைக்குவிப்பில் சீனா

  • Tamil Defense
  • June 17, 2020
  • Comments Off on சுசூல் என்னுமிடத்தில் அதிக அளவு படைக்குவிப்பில் சீனா

பங்கோங் ஏரிக்கு வலது பக்கம் உள்ள சுசூல் என்னுமிடத்தில் சீனா இராணுவம் அதிக அளவு தனது படைப் பிரிவுகளை குவித்து வருவதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

மறுபுறம் சீன வெளியுறவு அமைச்சகம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை அழைத்து உங்கள் முன்னனி துருப்புகளை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு கேட்டுள்ளது.

இந்தியா தனது வீரர்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் சீனா தனது எல்லைகளை காப்பதில் உறுதியுடன் உள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய இராணுவத்தின் சாகச மனப்பான்மை தான் நடந்த மோதலுக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.