
லடாக்கில் தற்போது பிரச்சினை நிலவி வரும் 4 பகுதிகளிலும் நிலைமை அப்படியே உள்ளதாகவும் இருதரப்பு படையினரும் அப்படியே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பிரச்சனை நிலவும் பகுதியில் இருந்து 400கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள கஷ்கர் நகரில் அமைந்துள்ள ஸின்ஜியாங் ராணுவ மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை அன்று இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே 7 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.