இந்திய சீன எல்லை பிரச்சினை நிகழ்ந்து வரும் நான்கு பகுதிகளில் இருந்து இருதரப்பும் கணிசமான அளவில் படைகளை திரும்ப பெற்ற நிலையில் தற்போது சீனா உட்பகுதிகளில் வீரர்களை குவித்துள்ளது.
10,000 வீரர்கள், பிரங்கிகள், டாங்கிகள், போர் விமானங்கள் உட்பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது கவனத்தில் எடுத்துகாகொள்ளப்பட்டு உள்ளது எற மத்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து நடைபெறவிருக்கும் மேஜர் ஜெனரல் மட்டத்திலான இந்திய சீன ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் இந்தியா இப்பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.