லடாக்கின் தெப்சாங் பகுதியில் புதிய பிரச்சனையை உருவாக்கும் சீனா !!

  • Tamil Defense
  • June 25, 2020
  • Comments Off on லடாக்கின் தெப்சாங் பகுதியில் புதிய பிரச்சனையை உருவாக்கும் சீனா !!

சீனா இந்திய எல்லையோரம் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. கல்வானில் நடந்த பிரச்சினைக்கு பின்னர் பிபி14 எனும் பகுதியில் இருந்து படைகளை விலக்கியதாக கூறிக்கொண்டு பாங்காங் ஸோ ஏரி, ஹாட் ஸ்ப்ரிங்ஸ் தற்போது மீண்டும் அதே கல்வான் பகுதி என பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது இந்த நிலையில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான தவ்லத் பெக் ஒல்டிக்கு தென் கிழக்கே 30கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெப்சாங் பகுதியில் சீனா புதிய பிரச்சினையை கிளப்பி உள்ளது.

இந்த பகுதியில் அதிக அளவில் துருப்புகள், ராணுவ வாகனங்கள், சிறப்பு கருவிகள் ஆகியவற்றை சீனா கொண்டு வந்து குவித்துள்ளது.

இங்கு சில பகுதிகளை கைப்பற்றி தவ்லத் பெக் ஒல்டிக்கு மிக அருகேயுள்ள பகுதிகள் வரை நகர்வதே சீனாவின் நோக்கமாக இருக்கலாம் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து.

மேலும் கடந்த காலங்களில் இந்த பகுதிகளில் பல முறை சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்,
2017 – 75 முறை
2018 – 83 முறை
2019 – 157 முறை.

சீனா லடாக்கை முழுவதுமாக அபகரிக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதை இந்த நிகழ்வுகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.