பங்கோங் ஏரியில் வானூர்தி தளம் அமைக்கும் சீனா

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on பங்கோங் ஏரியில் வானூர்தி தளம் அமைக்கும் சீனா

இந்திய சீன எல்லைப் பிரச்சனை அதிகரித்து வரும் வேளையில் பங்கோங் ஏரி பகுதியில் தனது நிலைகளை வலுப்படுத்தி வருகிறது சீனா.இந்தியா சீன கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை எதும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படவில்லை.

பேங்கோங்கின் பிங்கர் 4 பகுதியில் வானூர்தி இறங்கு தளமும் ,ஏரியின் தெற்கு பகுதியில் அதிக அளவு வீரர்களும் குவித்து வருகிறது.கடந்த எட்டு வாரங்களாக சீனா நிலைகளை அமைத்து வருகிறது.

சீனர்கள் பிங்கர் 2 வரை இந்தியப் படைகளை திரும்ப செல்ல கூறி வருவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.எல்லையை மாற்றி அமைக்க முயற்சிக்கவில்லை என்றும் ஆனால் திரும்பும் எண்ணம் இல்லை என்றும் சீ்னர்கள் கூறியதாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாமும் தேவையான அளவு படைகளை அங்கு குவித்துள்ளோம்.ஆனால் இந்த பகுதியில் அமைப்பு காரணமாக நமது செயல்படும் திறன் குறைவாக உள்ளது.இது நமக்கு சவால் விடும் நிலப்பகுதி என மற்றும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.