நேபாளத்திலும் சீனா ஆக்கிரமிப்பு !!

  • Tamil Defense
  • June 24, 2020
  • Comments Off on நேபாளத்திலும் சீனா ஆக்கிரமிப்பு !!

நேபாள நாட்டின் வடக்கு பகுதியில் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த பகுதிகளில் சீனா சில பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

வடக்கு பகுதியில் உள்ள ருய் எனும் கிராமத்தை சீனா முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது, இதைத்தவிர வேறு சில பகுதிகளிலும் சீனா தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்து வருகிறது.

எல்லையோரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம் எனும் போர்வையில் ஏற்கனவே சில பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் இன்னும் சில பகுதிகள் சீனாவுக்கு பறிபோகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்த செய்திகள் வெளியான போது நேபாள மக்கள் போராட்டங்களில் குதித்தனர். அந்த சமயத்தில் தான் இந்தியாவின் சில பகுதிகளை உரிமை கோரி நேபாள அரசு இந்த பிரச்சினையை திசை திருப்பியதாக கூறப்படுகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு துணை போகும் நேபாள பிரதமர் கே.பி. ஒலி அநாவசியமாக இந்தியாவுடன் உரசி கொள்வது தேவையில்லாத ஒன்று.