இந்தியாவுடனான எல்லைக்கு பொறுப்பான சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகத்திற்கு புதிய தளபதி நியமனம் !!
1 min read

இந்தியாவுடனான எல்லைக்கு பொறுப்பான சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகத்திற்கு புதிய தளபதி நியமனம் !!

இந்தியாவுடனான 3488 கிமீ நீளம் கொண்ட பகுதியை கண்காணிகாகும் பொறுப்பு சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகத்திற்கு உரியது. இக்கட்டளையகத்தில் தரைப்படை, விமானப்படை மற்றும் ராக்கெட் படை ஆகியவை உள்ளன.

இதன் தளபதியாக பதவி வகித்து வந்தவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஜாவோ ஜாங்கி, தற்போது தீடிரென இவரை மாற்றி விட்டு லெஃப்டினன்ட் ஜெனரல் ஸூ கீலிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் இதற்கு முன்னர் சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளையக தளபதியாக செயல்பட்டு வந்தார்.

தற்போது லடாக்கில் பிரச்சினை நிலவும் சமயத்தில் இந்த நியமனம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று இந்திய சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 14ஆவது கோர் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கு பெறுகிறார். ஏற்கனவே 10சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.