Breaking News

இருமுனை போர் : இந்தியாவின் பலம் என்ன – முன்னாள் விமானப்படை அதிகாரியின் பார்வை !!

  • Tamil Defense
  • June 8, 2020
  • Comments Off on இருமுனை போர் : இந்தியாவின் பலம் என்ன – முன்னாள் விமானப்படை அதிகாரியின் பார்வை !!

மேற்கில் பாகிஸ்தான் மற்றும் கிழக்கில் சீனா ஆகியவை இணைந்து போர் தொடுக்குமா எனும் கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருமுனை போர் சாத்தியமா ?? எந்தளவுக்கு இதில் நாம் வெற்றி பெற முடியும் ?? ஆகியவை நம் முன் உள்ள கேள்விகள்.

ஆம், நிச்சயமாக இருமுனை போர் என்பது சாத்தியமான ஒன்று தான். நமது பாதுகாப்பு திட்டமிடலில் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியமான ஒன்று தான்.

இருமுனை போர் நடக்கும் பட்சத்தில் இந்தியா தனது போர் திறன்களை பிரித்து செயல்பட வேண்டி இருக்கும்.

போர்முனைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும்,
1) மேற்கு பகுதி (பாக் எல்லை)
2) வடக்கு பகுதியில் உள்ள லடாக் முதல் நேபாளம் வரை
3) நேபாளத்திற்கு அடுத்து துவங்கி அருணாச்சல பிரதேசம் வழியாக தென்னிந்தியா வரை.

இது படிப்பதற்கோ கேட்பதற்கோ சுலபமாக இருக்கலாம் ஆனால் தில்லியில் உள்ள தலைமை கட்டளையகத்தில் இருந்து கொண்டு இதனை கையாள்வது இமாலய விஷயமாகும். இந்த நடவடிக்கைகள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தை போன்றதாக இருக்கும்.

பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லையில் சீன விமானப்படையை விட அதிகம் பலம் வாயந்ததாக இருக்கும் காரணம் பாக் விமானப்படையின் பெரும்பாலான தளங்கள் இந்திய எல்லையோரம் அல்லது எல்லைக்கு அருகில் உள்ளன. சீன விமானப்படைக்கு சொற்பமான தளங்கள் தான் உள்ளன அவற்றில் இருந்து முழு திறனுடன் இயங்கவும் முடியாது.சீன விமானப்படை முழு திறனுடன் இயங்க சுற்றி மியான்மர் வழியே வரலாம் ஆனால் அதிக தொலைவு காரணமாக டேங்கர் விமானங்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகாது. ஆனால் சீனாவுக்கு பலமான ஒரு பகுதி உள்ளது சீன தளங்கள் தொலைதூர வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ளன இதை தவிர அதன் இரண்டாவது ஆர்ட்டில்லரி கோர் நிறைய ஏவுகணைகளை கொண்டுள்ளது அவற்றை வைத்து இந்திய நகரங்களை குறிவைக்க முடியும்.

இந்திய விமானப்படைக்கு இத்தகைய பல ஏவுகணை தாக்குதல்களை அறிவும் திறனும் உள்ளது, ஆனால் இதுவும் இமாலய நடவடிக்கையாகும்.

இந்திய விமானப்படையின் அங்கீகரிக்கப்பட்ட படையணிகள் எண்ணிக்கை 42 ஆகும் ஆனால் தற்போது 30களில் தான் அது உள்ளது. வான் பாதுகாப்பு பிரிவிஙள் நவீனபடுத்தப்பட்டு வருகின்றன தற்போது நிலைமை நல்ல விதமாக உள்ளது. ஆனால் இருமுனை போருக்கு இன்னும் அதிக அளவில் இப்பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தளங்களை மட்டுமே பாதுகாக்கும் கிலம் மலையேறி விட்டது தற்போது மிகப்பெரிய அளவில் பரந்த பகுதிகளை முழுவதும் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்திய விமானப்படையின் சரக்கு போக்குவரத்து திறன் சிறப்பாக உள்ளது. தற்போது இது பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு முனையில் பாகிஸ்தான் உடன் நடக்கும் போர் மிக உக்கிரமாக இருக்கும். இங்கு இந்திய விமானப்படைக்கு பல பணிகள் காத்திருக்கும். முன்னேறும் இந்திய படைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், முன்னேறி வரும் பாக் படைகளை துவம்சம் செய்ய வேண்டும், பாக் விமானப்படையை வானில் சந்திக்க வேண்டும், பாக் விமானப்படை தளங்களை ஊடுருவி சென்று தாக்க வேண்டும் அதற்கு முதலில் பாக் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க வேண்டும் இப்படி பலதரப்பட்ட பணிகளை இந்திய விமானப்படை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பாக் உடனான போர் மிகவும் கொடுரமானதாக உக்கிரமாகவே இருக்கும். ரஃபேல் இந்த இடத்தில் பெரிதும் கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இரண்டு முனைகளில் நடக்கும் போர் மிகவும் வித்தியாசமாக இருக்கும் காரணம் மலைப்பாங்கான பகுதிகளில் தரைப்படை தான் முன்னின்று போராட வேண்டியிருக்கும். இங்கு சீன விமானப்படையின் செயல்பாடு இயற்கையால் பெருமளவில் குறைக்கப்படும் என்பதால் இந்திய விமானப்படையின் செயல்பாடுகளும் குறையும் பெரும்பாலும் இது நமது படைகளை பாதுகாக்கவே ஆகும். சில சமயங்களில் சில சீன தளங்களை தாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

எது எப்படியோ இருமுனை போருக்கு இந்திய விமானப்படை தன்னை தயார்படுத்தி வருகிறது அவ்வப்போது பயிற்சிகளையும் மேற்கொள்கிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு ககன் ஷக்தி எனும் நடவடிக்கையை இந்திய விமானப்படை மேற்கொண்டது. இதில் இந்திய விமானப்படை சிறப்பாக செயல்பட்டது பன்னாட்டு விமானப்படைகள் பாராட்டும் அளவிற்கு இந்திய விமானப்படையின் செயல்பாடுகள் இருந்தன. அமெரிக்க விமானப்படையின் பராமரிப்பு மற்றும் விமான ஏவுதல் தரவுகளை இந்திய விமானப்படை மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது இருக்கும் விமானப்படையின் படையணிகள் எண்ணிக்கையே போதுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாகும், நாம் நமது பலத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். எஸ்500, ரஃபேல், சினூக், அபாச்சி, தேஜாஸ், ஹெர்குலிஸ், க்ளோப்மாஸ்டர், ஆகாஷ், பிருத்வி, பிரம்மாஸ், அஸ்திரா, ஸ்கால்ப், மிட்டியோர், மைகா என மெதுவாக ஆனால் சீராக நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். கடந்த சில வருடங்களில் துணிந்து செய்யும் திறன் மிகவும் அதிகரித்துள்ளது. இதுவும் நமக்கு பெரிய பலமாகும்.

  • விங் கமாண்டர் அமித் ரஞ்சன் கிரி (ஓய்வு).