
லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய அரசுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி இந்த நிறுவன டென்டர்களை பெற்றுள்ள சீன நிறுவனங்களை வெளியேற்றவும் எதிர்காலத்தில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.