இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுரங்க கட்டுமானத்தை நிறைவு செய்த எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு !!

  • Tamil Defense
  • June 22, 2020
  • Comments Off on இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுரங்க கட்டுமானத்தை நிறைவு செய்த எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு !!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலி இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

அதே சமயம் இந்த பகுதி மிகவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சாலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக லடாக் பகுதிக்கு மிகப்பெரிய அளவில் படைநகர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ரோஹ்தாங் வழியாக நடைபெறும் போக்குவரத்து பனிக்காலங்களில் சற்றே அதிகமான சிரமத்தை அளிக்கும். பனிக்காலத்தில் ராணுவம் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்தும் அதே நேரத்தில் லாஹூல் பள்ளதாக்கு பகுதி மக்கள் ஆறு மாதங்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.

தற்போது இந்த அடல் சுரங்கம் ரோஹ்தாங் பாஸ் பகுதிக்கு அடியில் மலையை குடைந்து சுமார் 8.8கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லாஹூல் பகுதி மக்கள் பனிக்காலத்திலும் தங்கு தடையின்றி மற்ற பகுதிகளுக்கு சென்று வர முடியும்.

வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்தினால் லே நகரத்திற்கு செல்லும் நேரத்தில் மூன்று மணி நேரம் சேமிக்கப்படும்.
ராணுவ படை நகர்வுகளுக்கும் இப்பாதை மிக உதவியாக அமையும்.

கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது மின்சாரம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் இந்த பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.