கல்வான் பள்ளதாக்கில் ஆற்றுப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது !!

  • Tamil Defense
  • June 19, 2020
  • Comments Off on கல்வான் பள்ளதாக்கில் ஆற்றுப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது !!

இந்திய ராணுவம் மற்றும் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு ஆகியவை இணைந்து கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் ஆற்றின் குறுக்கே சுமார் 60மீட்டர் நீளம் கொண்ட ஆற்றுப்பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.

இந்த பாலம் மூலமாக நமது காலாட்படை வீரர்கள் எளிதில் எல்லைக்கு நகர முடியும் குறிப்பாக தவ்லத் பெக் ஒல்டி தளம் வரை செல்ல முடியும்.

இந்த பாலத்தை கட்டி முடிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.