கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு இந்திய சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 20 இந்திய வீரர்களும் 60க்கும் அதிகமான சீன வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இது குறித்து
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இந்த வீரர்களின் வீரம் ஒருபோதும் மறக்கப்படாது” என கூறியுள்ளார்.
அதை போலவே இந்தியாவுக்கான ஃப்ரெஞ்சு தூதர் எம்மானுவேல் லெனாய்ன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இந்திய சீன எல்லையில் தங்களது பணியை திறம்பட செய்து வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் இந்திய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்றுள்ளார்.
உலகமே நமது வீரர்களின் வீரத்தை மெச்சும் போது தாய்நாட்டில் இருந்து கொண்டே சிலர் நமது வீரர்களை இழிவாக பேசுவதும் , சீனாவுக்கு ஆதரவாக பேசுவதும் கண்டிக்கதக்கது.