கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி செமிலாக், ஏ.எஸ்.டி.இ, டி.ஆர்.டி.ஓ மற்றும் எஸ்.டி.ஐ ஆகிய நிறுவனங்கள் மற்றும் இந்திய விமானப்படையின் தலைமையகம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நடத்திய கூட்டத்தில் வான்வழி தாக்குதல் திறன் கொண்ட பிரம்மாஸ் ஏவுகணை பயன்பாட்டிற்கு தயார் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இந்த சான்றிதழ் தேஜாஸ் விமானத்திற்கு. வழங்கப்பட்ட முதல்கட்ட செயல்பாட்டு சான்றிதழுக்கு நிகரானது. இனி கூடிய விரைவில் தேஜாஸ் விமானத்திற்கு வழங்கப்பட்ட இறுதிக்கட்ட செயல்பாட்டு சான்றிதழுக்கு நிகரான பயன்பாட்டு சான்றிதழ் வான்வழி தாக்குதல் பிரம்மாஸ் ஏவுகணைக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த வான்வழி தாக்குதல் பிரம்மாஸ் ஏவுகணைகள் வான்வழி போரில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும், அந்த வகையில் இந்திய விமானப்படையின் திறன் பன்மடங்காக அதிகரிக்கும்.
தற்போது பிரம்மாஸ் ஏவுகணைகளை சுமக்கும் திறன் கொண்ட சுகோய்30 போர் விமானங்கள் நமத தஞ்சை விமானப்படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.