சீன பொருட்களை புறக்கணித்து இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை !!

  • Tamil Defense
  • June 18, 2020
  • Comments Off on சீன பொருட்களை புறக்கணித்து இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை !!

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சீன பொருட்களை புறக்கணித்து இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்படி இந்த கூட்டமைப்பு முதல்கட்டமாக சுமார் 500 பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இதில் உடைகள், காலணிகள், சமையல் அறை பொருட்கள், அலங்கார விளக்குகள், விளையாட்டு பொருட்கள், கைக்கடிகாரங்கள், அன்றாட உபயோக மின்னனு சாதனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த அமைப்பு இந்த வருட இறுதிக்குள் சுமார் 1லட்சம் கோடி ருபாய் வரையிலான சீன பொருட்கள் வியாபரத்தை இந்திய பொருட்கள் நோக்கி திருப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்திய பிரபலங்கள் சீன பொருட்களின் விளம்பர தூதர்களாக செயல்படுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

இந்த கூட்டமைப்பு நாடு முழுவதும் சுமார் 7 கோடி வர்த்தகர்கள் மற்றும் 40,000 வர்த்தக சங்கங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.