பாகிஸ்தானிய பங்கு சந்தை மீது பலூச் விடுதலை போராளிகள் தாக்குதல் !!

  • Tamil Defense
  • June 30, 2020
  • Comments Off on பாகிஸ்தானிய பங்கு சந்தை மீது பலூச் விடுதலை போராளிகள் தாக்குதல் !!

சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள கராச்சி நகரம் பாகிஸ்தானுடைய வர்த்தக தலைநகர் ஆகும். இங்கு தான் பாகிஸ்தான் பங்கு சந்தை இயங்கி வருகிறது.

நேற்று நான்கு பலூச் விடுதலை போராளிகள் பங்கு சந்தை மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு காவல் ஆய்வாளர், நான்கு காவலாளிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டார், மேலும் ஐவர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்திய நான்கு போராளிகளும் பாதுகாப்பு படையினரால் வீழ்த்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்து ஏகே47 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் பொறுபாபேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.