பீஹார் மாநிலத்தில் கங்கை நதிக்கு குறுக்கே 5.6கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டு டென்டர் விடப்பட்டது.
இதில் நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன அவற்றில் இரண்டு சீன நிறுவனங்கள் ஆகும்.
தற்போது கல்வான் மோதல் மற்றும் லடாக்கில் பல்வேறு எல்லை பிரச்சினைகள் காரணமாக மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து சீன நிறுவனங்களை வெளியேற்றி உள்ளது. ஆகவே புதிய டென்டருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 2900கோடிகள் மதிப்புமிக்க இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த வருடம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.