கொரனாவால் தாமதமான இராணுவ பயிற்சிகள் ; அதே நேரம் முக்கிய இடங்களில் சீனா ஊடுருவல்

  • Tamil Defense
  • June 3, 2020
  • Comments Off on கொரனாவால் தாமதமான இராணுவ பயிற்சிகள் ; அதே நேரம் முக்கிய இடங்களில் சீனா ஊடுருவல்

கொரானா காரணமாக இந்திய படைகள் லடாக்கில் வருடாந்திர பயிற்சியை ஒத்திவைத்தன.லடாக் பகுதியில் சில வீரர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது.மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் போது தான் கிட்டத்தட்ட சீனாவும் இந்திய எல்லைக்குள் முக்கிய இடங்களில் ஊடுருவியுள்ளது.

லடாக்கின் வடக்கு சப் செக்டாரில் இராணுவம் மற்றும் இந்தோ திபத் படைகள் இணைந்த பயிற்சி நிறுத்தப்பட்டது.சீனப்பகுதிகளில் நடக்கும் பயிற்சிகளுக்கு இணையாக இந்தியப் பகுதிகளிலும் பயிற்சிகள் நடப்பது வழங்கம்.

மார்ச் இரண்டாவது வாரம் முதல் வீரர் கொரானாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.இதன் பிறகு வீரர்கள் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டது.பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாவும் இது போல பயிற்சியை தள்ளி வைத்தாலும் திடீரென கல்வான் மற்றும் பங்கோங் ஏரியின் பிங்கர் பகுதிகளில் ஊடுருவி அதிர்ச்சி அளித்தனர்.

இந்தியாவும் உடனடியாக லே பகுதியில் இருந்து படைகளை எல்லைக்கு அனுப்பியது.கொரானாவால் ஏற்படுத்திய அனைத்து தடைகளும் தகர்க்கப்பட்டு வீரர்கள் அனுப்பப்பட்டனர்.3000 முதல் 4000 சீன வீரர்கள் கல்வான் மற்றும் பங்கோங் ஏரியில் குவிக்கப்பட்டனர்.

ஏப்ரல் கடைசியில் தான் நமது வீரர்கள் சீனர்களின் கொள்கையை உணர்ந்து மே 5-6 தேதிகளில் தான் முதல் மோதல் நேர்ந்துள்ளது.முதல் மோதலில் இராணுவம் மற்றும் இந்தோ திபத் படை வீரர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.இந்தோ திபத் படை இராணுவத்துடன் இணைந்து ரோந்து சென்றாலும் அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.இரு படைகளின் செயல்படு முறை முற்றிலும் வேறானது ஆகும்.

இதற்கு முன் இந்திய படைகள் ரோந்து சென்ற முக்கிய பகுதிகளில் ஊடுருவி அங்கு டேன்ட் அமைத்துள்ளனர் சீனர்கள்.இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது இந்தியா.மேஜர் ஜெனரல் அளவில் கூட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படவில்லை.வரும் ஜீன் 6 அன்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

.