இராணுவ வீரர்களை சந்தித்த அருணாச்சல பிரதேச முதல்வர்

  • Tamil Defense
  • June 24, 2020
  • Comments Off on இராணுவ வீரர்களை சந்தித்த அருணாச்சல பிரதேச முதல்வர்

இந்திய சீனா பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகின்றன எனத் தகவல் வெளியிடப்பட்டு வந்தாலும் மறுபுறம் சீனா அளவுக்கு அதிகமாக துருப்புகளை எல்லையில் குவித்து வருவதோடு பங்கோங் ட்சோ பகுதியில் நிரந்த பங்கர்களையும் ஏற்படுத்தி வருகிறது.

முதலில் விமானப்படை தளபதி அவர்களும் அதன் பிறகு இன்று இராணுவ தளபதியும் லடாக் பயணம் மேற்கொண்டு அங்கு வீரர்கள் மற்றும் தளவாடங்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

விமானப்படை தனது காம்பாட் வான் ரோந்துகளை லே பகுதியில் அதிகரித்துள்ளது.மறுபுறம் இந்தோ திபத் எல்லைப்படை 35 கம்பெனி வீரர்களை எல்லைக்கு அனுப்பியுள்ளது.சிக்கிம் ரிசர்வ் பட்டாலியன் வீரர்களை எல்லைப் புறத்திற்கு அனுப்பி வருகிறது.

அமெரிக்கா,நெதர்லாந்து,கிர்கிஸ்தான் , அஜர்பைஜான் என சில நாடுகளிடம் இருந்து அதிஎடை தூக்கும் விமானங்கள் நாள்தோறும் சப்ளைகளை இந்தியாவிற்கு கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு அவர்கள் பம்லா காவல் நிலையில் உள்ள இராணுவ வீரர்களை சந்தித்து பேசியுள்ளார்.

சுதந்திரம் பெற்ற நாள் முதல் எல்லைப் பாதுகாப்பில் இந்திய இராணுவத்தின் திறனை எண்ணியுள்ளதாக அவர் பேசியுள்ளார்.

உங்களது கைகளில் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என அவர் பேசியுள்ளார்.