
சனிக்கிழமை அன்று டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே இளம் அதிகாரிகளிடையே உரையாற்றும் போது சில அறிவுரைகளை வழங்கினார்.
1) சாதி மதம் குலம் கோத்திரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு செயலாற்றுங்கள்.
2) சிக்கலான நேரங்களில் நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரை பகுதிரை மனதில் நினைத்து கொள்ளுங்கள்.
3) நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக எதையும் செய்ய துணியுங்கள்.
4) உங்கள் கீழ் பணியாற்றும் வீரர்களிடம் கரிசனையோடு இருங்கள்.
அதைப்போல இளம் அதிகாரிகளின் பெற்றோர்களிடம் “நேற்று வரை இவர்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகள், இன்று முதல் இவர்கள் எங்கள் பிள்ளைகள்” என கூறினார்.
இளம் அதிகாரிகளின் வாழ்வில் பொன்னான தருணமான பயிற்சி நிறைவு விழாவுக்கு கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.