ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் தங்கள் மாநிலம் வழி எவ்வித கட்டுபாடுகளும் இன்றி எப்போது வேண்டுமானாலும் நகரலாம் : இமாச்சல பிரதேச அரசு !!

  • Tamil Defense
  • June 20, 2020
  • Comments Off on ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் தங்கள் மாநிலம் வழி எவ்வித கட்டுபாடுகளும் இன்றி எப்போது வேண்டுமானாலும் நகரலாம் : இமாச்சல பிரதேச அரசு !!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நுழையும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கு எவ்வித கட்டுபாடும் இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில தலைமை செயலாளர். அணில் காச்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் விடுமுறைக்கு வரும்போது இ பாஸ் இல்லாமல் தங்களது அடையாள அட்டையை காட்டி வரலாம் எனவும், அதை போலவே வேறு மாநிலங்களில் இருந்து பணிக்கு திரும்பும் வீரர்கள் இ பாஸ் இன்றி அடையாள அட்டை மட்டும் காண்பித்து உள் நுழையலாம்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ராணுவம் (ARMY,NAVY,AIRFORCE)மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கு (CRPF,BSF,ITBP,SSB,AR, CISF) பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் எல்லைக்கு செல்லும் பெரும்பாலான வீரர்கள் இமாச்சல பிரதேச மாநிலம் வழியை தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.