சுதந்திரம் பெற்றதில் இருந்து பாகிஸ்தானுடன் 4 போர்களையும், சீனாவுடன் 1 போரையும் 1967ல் ஒரு சிறிய அளவிலான சண்டையையும் நாம் சந்தித்து உள்ளோம்.
இதன் காரணமாக நமது பாதுகாப்பு கொள்கையும் ஏனோ பாகிஸ்தானை மட்டும் கருத்தில் கொண்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் சீன பிரச்சினையை தற்போது இருக்கும் அரசு உட்பட எந்த அரசுமே அதிக சிரத்தையுடன் கையாண்டதில்லை.
சீனாவை நம்மிடம் இருந்து தள்ளி வைக்க மிக வலிமையான பொருளாதாரம் இன்றியமையாதது ஆகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அத்தகைய வலிமையான பொருளாதாரத்தை இன்னும் பெறவில்லை.
அத்தகைய வலிமையான பொருளாதாரம் இருந்தால் மட்டுமே நமது பாதுகாப்பு திறனை மிகப்பெரிய அளவில் வளர்க்க முடியும்.
உதாரணமாக சீனா 1962ல் இருந்து தற்போது அடைந்திருக்கும் நிலை எடுத்துகாட்டு. இன்று சீனாவின் பொருளாதாரம் நமது பொருளாதாரத்தை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாகும் இந்த பொருளாதார வலிமையால் சீன ராணுவ பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஆகவே வலிமையான பொருளாதாரத்திற்கு நாம் முதலில் அடித்தளமிட வேண்டும்.
பின்னர் அந்த பொருளாதார சக்தியின் மூலமாக நமது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்.
இத்தனை வருட கால தாமதமே மிகப்பெரிய தவறு இனியும் தாமதிக்காமல் உடனே விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எப்போதும் கல்வானை போன்றும் சூழல்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கர்டு தளத்தை சீன விமானப்படை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால் அது நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அது அமையும் என்பதில் எவ்வித ஐயமில்லை.