இந்திய-சீன மோதல் : இரு புதிய சாலைகளை சீன எல்லைக்கு அருகே அமைக்கும் இந்தியா

  • Tamil Defense
  • June 9, 2020
  • Comments Off on இந்திய-சீன மோதல் : இரு புதிய சாலைகளை சீன எல்லைக்கு அருகே அமைக்கும் இந்தியா

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா தற்போது புதிய இரு சாலைகளை அமைத்து வருகிறது.சப் செக்டார் நார்த் பகுதி என இராணுவம் அழைக்கும் பகுதியை இணைக்க முக்கியத்துவம் வாய்ந்த இரு சாலைகளை இந்தியா தற்போது அமைத்து வருகிறது.

தௌலத் பெக் ஓல்டி என்ற வெளிப்புற தூர நிலையை இணைக்க டர்பக்-ஸ்யோக்-தௌலத் பெக் ஓல்டி என்ற சாலைைா இந்தியா அமைத்துள்ளது.அதே போல தற்போது இரண்டாவது முக்கியத்துவம் கொண்ட சாலையை அமைத்து வருகிறது.காரகோரம் பாஸ் வழியாக செல்லும் இந்த இரண்டாவது சாலை சாசோமா முதல் சாசெர் லா வரை அமைக்கப்படுகிறது.இது தௌலத் பெக் ஓல்டிக்கு செல்ல மற்றும் ஒரு மாற்று வழி ஆகும்.

எல்லைச் சாலை அமைப்பு இந்த சாலையை வெகு வேகமாக அமைத்து வருகிறது.இதற்காகவே 11815 பணியாளர்கள் சிறப்பு அனுமதியுடன் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மோதல் நீடித்து வரும் வேளையிலும் கூட சாலைப் பணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.

ஹார்டுனெஸ் இன்டெக்ஸ்-3 என்ற திட்டத்தின் கீழ் சாசோமா முதல் சாசெர் லா வரை 17800 அடி உயரத்தில் இந்த சாலை அமைக்கப்படுகிறது.எல்லைச் சாலை அமைப்பு மேற்கொள்ளும் கடினமான சாலை பணி இதுவாகும்.

முதல் சாலையை சீனா தாக்க பல்வேறு காரணங்கள் இருப்பதால் இந்த இரண்டாவது முக்கியத்துவம் பெற்ற சாலை தேவையாக உள்ளது.

தற்போது எல்லைச் சாலை அமைப்பு 61 சாலைகளை ஏற்படுத்தி வருகிறது.2022 டிசம்பருக்குள் அனைத்து சாலைகளும் முடிவு பெறும் என கூறப்படுகிறது.

இந்த சாலைகள் மூலம் வீரர்கள் மற்றும் சப்ளைகளை எளிதாக உடனடியாக எல்லைக்கு நகர்த்த முடியும்.பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பதற்றத்தை தணிக்க முயற்சி செய்து வந்தாலும் தன்னகத்தே தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.