சீனா அருகே அமெரிக்க கடற்படை போர் ஒத்திகை !!

  • Tamil Defense
  • June 24, 2020
  • Comments Off on சீனா அருகே அமெரிக்க கடற்படை போர் ஒத்திகை !!

அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ். தியோடர் ருஸ்வெல்ட் ஆகிய அணுசக்தியால் இயங்கும் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் அவற்றின் படையணிகள் ஃபிலிப்பைன்ஸ் கடலில் உள்ள சீன எல்லைக்கு மிக அருகே போர்ப்பயிற்சியில் நடத்தி உள்ளன.

ஜூன் 21,22 ஆகிய தேதிகளில் இக்கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்கள் மற்றும் பல முன்னணி போர்க்கப்பல்கள் இந்த ஒத்திகையில் பங்கு பெற்றன.

இந்த ஒத்திகையில் வான் பாதுகாப்பு, கண்காணிப்பு, டேங்கர் கப்பல்களில் இருந்து சப்ளை, தொலைதூர தாக்குதல், உள்ளிட்ட பல பயிற்சிகளை அமெரிக்க கடற்படையினர் மேற்கொண்டனர்.

இது அமெரிக்கா சீனாவுக்கு விடுக்கும் மறைமுக சவாலாகவே உள்ளது.