இந்திய, ஆஸ்திரேலிய,ஜப்பானிய போர் விமானிகளுக்கு பயிற்சி வழங்க அமெரிக்கா விருப்பம் !!

  • Tamil Defense
  • June 28, 2020
  • Comments Off on இந்திய, ஆஸ்திரேலிய,ஜப்பானிய போர் விமானிகளுக்கு பயிற்சி வழங்க அமெரிக்கா விருப்பம் !!

சீன அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய ஆஸ்திரேலிய ஜப்பானிய போர் விமானிகளுக்கு பயிற்சி வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்து உள்ளது.

இந்த பயிற்சி திட்டமானது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த பயிற்சியை இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படை தளங்களில் ஒன்றான குவாம் தளத்தில் வைத்து நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான மேற்குறிப்பிட்ட சட்ட மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த முடிவு இதை போன்று சிங்கப்பூர் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்து ஆகிய ஆறே மாதங்களில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு
உள்ளது குறிப்பிடத்தக்கது.