
சமீபத்தில் பர்ஸ்ஸல்ஸ் ஃபாரம் நிகழ்வு நடைபெற்றது, இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அவர்களும் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஐரோப்பாவில் அமெரிக்கா தனது படைகளின் இருப்பை குறைக்க காரணம் என்ன என்று கேட்டார்
அதற்கு பதிலளித்த மைக் பாம்பியோ இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறது எனவும் இதன் எதிரொலியாக ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை ஆசியாவுக்கு அமெரிக்கா நகர்த்தி வருவதாகவும் கூறினார்.
மேலும் தென்சீனக் கடல் மற்றும் லடாக் பிரச்சினைகளை சீனாவின் அடாவடித்தனத்திற்கு எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டினார்.