சீன நடவடிக்கைகள் கவலையளிக்கிறது : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் !!

  • Tamil Defense
  • June 28, 2020
  • Comments Off on சீன நடவடிக்கைகள் கவலையளிக்கிறது : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் !!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில் சீன நடவடிக்கைகள் மிகவும் கவலையளிக்கிறது என தெரிவித்தார்.

சீனா கொரோனா தொற்று பாதிப்பை உலகநாடுகள் குறைக்க முயன்று வரும் நிலையில் இந்தியா தைவான் ஜப்பான் இந்தோனேசியா மலேசியா வியட்னாம் ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பல பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா தனது பங்கிற்கு சீனாவுடனான பனிப்போர் காரணமாக காய் நகர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.