முடிவுக்கு வரும் அமெதி துப்பாக்கி தொழிற்சாலை சிக்கல், இந்திய ராணுவத்திற்கு புதிய துப்பாக்கிகள் !!
1 min read

முடிவுக்கு வரும் அமெதி துப்பாக்கி தொழிற்சாலை சிக்கல், இந்திய ராணுவத்திற்கு புதிய துப்பாக்கிகள் !!

இந்திய ராணுவத்திற்கு 4300 கோடி ருபாய் செலவில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் ஏகே203 துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது.

ரஷ்யா உடனான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்த துப்பாக்கி தொழிற்சால் அமைக்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் மற்றும் இந்திய ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் ஆகியவை இடையே சரியான விலையை நிர்ணயம் செய்வதில் நிலவும் குழப்பம் காரணமாக இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு விலை நிர்ணய குழுவை அமைத்துள்ளது. எல்லாம் சீராக சென்று விலை நிர்ணயிக்கபட்டால் இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அமேதி துப்பாக்கி தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.