
இந்திய விமானப்படை முதன் முதலாக பயன்படுத்த தொடங்கிய ஏவாக்ஸ் விமானம் நாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஐ.எல்.76 விமானம் ஆகும். விமானத்தின் மீது இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலையும் , இஸ்ரேலிய நிறுவனமான எல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையும் இணைந்து தயாரித்த ஃபால்கன் EL/W 2090 ஏவாக்ஸ் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டன.
இந்த ரேடாரை அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு உலகின் அதிநவீன ரேடார் என்று குறிப்பிட்டு உள்ளது.
இத்தகைய 3 விமானங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். மேலும் இரண்டு விரைவில் இணைக்கப்பட உள்ளது.
இந்த மூன்று விமானங்களின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
Pic 1
Pic 2
Pic 3
நாம் பயன்படுத்தி வரும் மற்றொரு ஏவாக்ஸ் விமானம் பிரேசிலிய விமான நிறுவனத்தின் தயாரிப்பான இ.ஆர்.ஜே-145 விமானம் ஆகும். இந்த விமானத்தின் மீது நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த நேத்ரா ஏவாக்ஸ் ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பணியை CSIR, NAL மற்றும் DRDO ஆகிய நிறுவனங்கள் கூட்டாக மேற்கொண்டு உள்ளன.
தற்போது 3 விமானங்கள் படையில் உள்ளன, மேலும் 24 விமானங்களை இணைக்கும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீழே மேற்குறிப்பிட்ட இத்தகைய மூன்று விமானங்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Pic 1
Pic 2
Pic 3