
இந்திய தரைப்படைக்கு ரஜோவ்ரி பகுதியில் 8 பயங்கரவாதிகள் வரை பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் வீரர்கள் மிகப்பெரிய தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
தற்போது வரை 1 பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே ரஜோவ்ரி பகுதியில் தான் நேற்றிரவு பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நமது சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் எனும் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.