45 தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் கொரோனாவால் பாதிப்பு !!

  • Tamil Defense
  • June 15, 2020
  • Comments Off on 45 தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் கொரோனாவால் பாதிப்பு !!

நாட்டின் தலைநகர் தில்லியில் நிலைநிறுத்தப்பட்டு பணியாற்றி வந்த தேசி பாதுகாப்பு படையின் 45 கமாண்டோ வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3 இன்டலிஜென்ஸ் பீயுரோ அதிகாரிகளும், 4 இந்தோ திபெத் எல்லை காவல்படை வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.