
லடாக்கில் நடைபெற்ற சண்டைக்கு பிறகு 36 இந்திய வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காணமல் போல சில வீரர்கள் இந்தியா திரும்பியிருந்தாலும் ஒரு மேஜர் மற்றும் ஒரு கேப்டன் இன்னும் காணவில்லை.அவர்கள் சீன கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மறுபுறம் இந்தியா பக்கம் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
நேற்று சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் கமாண்டிங் அதிகாரி ஒருவர் மற்றும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.துப்பாக்கியால் இரு நாட்டு வீரர்களும் தாக்கப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டனர் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சீனப் பக்கம் கிட்டத்தட்ட ஐந்து வீரர்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் தற்போது வெளியிட்ட தகவல்படி இந்திய வீரர்கள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.