Day: June 30, 2020

இஸ்ரேலிடம் இருந்து மேலதிக ஸ்பைஸ்-2000 குண்டுகள் வாங்கும் விமானப்படை

June 30, 2020

சீனாவுடனான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது.இந்நிலையில் இந்திய விமானப்படைக்காக இஸ்ரேலிடம் இருந்து SPICE-2000 குண்டுகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்திய விமானப்படை இந்த குண்டுகளை பயன்படுத்தி தான் பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது குறிப்பிடத்தக்கது. எதிரி எல்லைக்குள் இருக்கும் பங்கர்கள்,கட்டிடங்கள் ஆகியவற்றை ஓர் பாதுகாப்பான இடத்தில் இருந்தவாறே இந்த குண்டுகள் மூலம் தாக்கி அழிக்க முடியும். இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானங்களில் இருந்து இந்த ஸ்பைஸ் குண்டுகளை வீசலாம்.நன்கு கடினமாக கட்டமைக்கப்பட்ட […]

Read More

சீனாவின் எஸ்400, எஸ்300 ஆகியவற்றை சமாளிக்க இந்திய விமானப்படை திட்டம் !!

June 30, 2020

இந்திய விமானப்படை சீனாவுடன் போர் ஏற்பட்டால் சீனாவின் எஸ்400, எஸ்300 ஆகியவற்றை சமாளிக்க ஒத்திகைகளை மேற்கொண்டு உள்ளது. இதுபற்றி மூத்த விமானப்படை அதிகாரி ஒருவர் பேசுகையில் சீன ராணுவத்தின் எஸ்400, எஸ்300, எல்.ஒய்80 உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை சமாளிக்க இந்திய விமானப்படை ஒத்திகை மேற்கொண்டதாக தெரிவித்தார். இதற்கு லடாக், திபெத் ஆகிய பகுதிளின் அதிக உயரம் இந்திய விமானப்படைக்கு கைக்கொடுக்கும் என கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் இந்த அமைப்புகளை குறைத்து மதிப்பீடு செய்யவும் […]

Read More

சீன ராணுவத்தின் ரிசர்வ் பிரிவுகளின் கட்டுபாட்டு அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் சீன அதிபர் !!

June 30, 2020

சீன ராணுவத்தின் ரிசர்வ் படை பிரிவுகளின் முழு கட்டுபாட்டு அதிகாரத்தையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜூலை 1 முதல் எடுத்துக்கொள்ள உள்ளார். இதற்காக இந்த ரிசர்வ் பிரிவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மத்திய ராணுவ கமிஷன் ஆகியவற்றின் கீழ் கொண்டு வர உள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சீன ராணுவத்தின் முழு கட்டுபாட்டு அதிகாரத்தையும் தன்னகத்தே சீன அதிபர் ஜி ஜின்பிங் வைத்திருக்க […]

Read More

சீன செயலிகள் மீதான தடை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – சீனா !!

June 30, 2020

59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு செயலாளர் ஜாவோ லிஜியன் இதுகுறித்து பேசுகையில் சீன அரசு எப்போதும் தங்கள் நாட்டு நிறுவனங்களை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் படி அறிவுறுத்தி உள்ளதாகவும் அதை போல இந்தியாவும் சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் கூறினார். தடை செய்யப்பட்ட 59 செயலிகளும் தகவல் திருட்டு மற்றும் கடத்தல் போன்ற […]

Read More

வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள இந்திய விமானப்படையின் போக்குவரத்து திறன் !!

June 30, 2020

கிழக்கு லடாக்கில் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்திய விமானப்படையின் போக்குவரத்து திறன் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது போர் காலத்தில் போர்முன்னனிக்கு வீரர்களை நகர்த்துவது, தளவாடங்களை நகர்த்துவது, ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை நகர்த்துவது ஆகியவை மிகவும் முக்கியமானது ஆகும். கடந்த சில வருடங்களில் வாங்கப்பட்ட சி17, சி130ஜே, சி.ஹெச் 47 சினூக் ஆகியவை நமது போக்குவரத்து திறனை பன்மடங்கு அதிகரித்துள்ளன. இதை தவிர 80களில் வாங்கப்பட்ட ஐ.எல்.76 மற்றும் ஏ.என்32 […]

Read More

கல்வான் பகுதிக்கு டி-90 டேங்குகளை நகர்த்தும் இந்திய இராணுவம்

June 30, 2020

ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் வரப்போகும் கடினமான சூழ்நிலையை சமாளிக்க ஆறு டி-90 டேங்குகளை கல்வான் பகுதிக்கு இந்திய இராணுவம் நகர்த்தியுள்ளது.தோள்களில் தாங்கி ஏவக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளையும் எல்லைப் பகுதிக்கு நகர்த்தியுள்ளது இந்திய இராணுவம். சீன இராணுவம் தொடர்ந்து எல்லைக்கு ஆயுதங்களை அனுப்பி வருவதால் இந்திய இராணுவமும் தனது பீஷ்மா டேங்குகளை எல்லைக்கு அனுப்பியுள்ளது. 155மிமீ ஹௌவிட்சர்களுடன் இன்பான்ட்ரி காம்பட் வாகனங்களும் 1597கிமீ நீளமுள்ள கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் படைகளை […]

Read More

இந்தியா பூட்டான் நட்புறவு : புதிய நீர் மின்சார நிலையம் கட்ட இந்தியா உதவி !!

June 30, 2020

இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் 600மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சார நிலையத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன. பூட்டான் நாட்டின் கிழக்கு பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியான ட்ராஷியாங்ட்ஸே பகுதியில் உள்ள கோலோங்சூ பகுதியில் 600 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சார நிலையத்தை இந்திய உதவியுடன் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மற்றும் பூட்டானிய வெளியுறவு அமைச்சர் தான்டி டோர்ஜி மேலும் பூட்டானிய பொருளாதார […]

Read More

சீனாவுக்கு விமானந்தாங்கி கப்பல் கட்ட தேவையான முக்கியமான கலப்பு உலோகத்தை விற்க ரஷ்யா மறுப்பு !!

June 30, 2020

விமானந்தாங்கி கப்பல்கள் கட்ட பயன்படும் உலோகமானது வழக்கமான உலோகங்களை விடவும் வித்தியாசமானதாகும்,காரணம் அவை அதிக துரு அரிப்பு எதிர்ப்பு தன்மை மற்றும் அதிக வலிமை கொண்டவையாக இருக்கும். காரணம் கப்பல்கள் மிக நீண்ட காலம் கடலிலேயே தங்கி இருக்கக்கூடியவை ஆகும் மேலும் விமானங்களின் எடையை ஆயுதங்களுடன் மேலேழும்புகையிலும், தரை இறங்குகையிலும் தாங்க வேண்டியதாகிறது. சீனா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உரசல் மிகுந்த உறவை கொண்டுள்ளது ஆகையால் மேற்குலகிடமிருந்து இத்தகைய உலோகமோ அல்லது அது சார்ந்த தொழில்நுட்பமோ […]

Read More

அடுத்த மாதம் 4க்கு பதில் 6ஆக வரும் ரஃபேல் விமானங்கள் !!

June 30, 2020

கல்வான் பள்ளதாக்கு மற்றும் கிழக்கு லடாக்கில் பல்வேறு இடங்களில் சீனா எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அவசரகால கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் ஃபிரான்ஸ் 6 ரஃபேல் போர் விமானங்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. முதலில் 4 ரஃபேல் போர் விமானங்கள் வருவதாக மட்டுமே இந்தியா வருவதாக இருந்த நிலையில் தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த விமானங்களை நமது போர் விமானிகள் ஓட்டி வந்து அம்பாலா […]

Read More

கடலில் சீனாவுக்கு எதிரான கண்காணிப்பை வலுப்படுத்தும் இந்திய கடற்படை !!

June 30, 2020

சமீபத்தில் நடைபெற்ற கல்வான் மோதலுக்கு பிறகு இந்திய கடற்படை தனது பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தற்போது எல்லையில் பிரச்சினை நிலவி வரும் நிலையில் இந்திய கடற்படை அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகளுடனான ஒத்துழைப்பை அதிகபடுத்தி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சீன கடற்படை கப்பல்கள் அதிகம் பயணிக்கும் கடல்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் ஜப்பானிய கடற்படை ஆகியவை இணைந்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் […]

Read More