Breaking News

Day: June 29, 2020

சீன குண்டுவீச்சு விமானத்தை இடைமறித்த ஜப்பானிய விமானப்படை !!

June 29, 2020

சீன விமானப்படைக்கு சொந்தமான ஹெச்6-கே ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று ஜப்பானுடைய ஒகினாவா மற்றும் மியாகோ தீவுகளுக்கு இடையே உள்ள சர்வதேச வான்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ஜப்பானிய விமானப்படையால் இடைமறிக்கபட்டதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் இந்த விமானம் ஜப்பானிய வான் எல்லைக்குள் நுழையவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த சீன குண்டுவீச்சு விமானம் நீண்ட தூர தாக்குதல்களை நடத்த கூடிய திறன் கொண்டது. அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்டது […]

Read More

கேப்டன் விஜயந்த் தபார்

June 29, 2020

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர் கேப்டன் விஜயந்த். இராணுவ வழி வந்த குடும்பம் என்ற போதிலும் இராணுவத்தில் இணைவதை தன் இலட்சியமாக கொண்டு 2வது இராஜபுதன படைப்பிரிவில் இணைந்தார். கார்கில் போருக்கு முன் குப்வாரா பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இவரது படைப்பிரிவு ஈடுபட்டது.அங்கு ருக்சனா என்ற சிறுமியை சந்தித்தார்.அவளுடைய அப்பா அவள் கண்முன்னேுய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பேச்சை இழந்துவிட்டாள்.அவள் மீது அன்பு கொண்ட கேப்டன் தினமும் இனிப்புகள் வாங்கி அவளை சந்திப்பது வழக்கம்.அதிதீவிர முயற்சியின் […]

Read More

வீரர்கள் அதிரடி; காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

June 29, 2020

காஷ்மீரின் அனந்தநாக்கில் நடந்து வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் அதிரடியாக வீழ்த்தியுள்ளனர். குல்சோகர் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வீரர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு ஆபரேசன் ஏவப்பட்டது. தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் இராணுவ வீரர்களை நோக்கி சுட வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து நடைபெற்ள என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-46 மற்றும் இரு பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More