Day: June 29, 2020

மீண்டும் நாளை பேச்சுவார்த்தை-பிரச்சனை முடிவுக்கு வருமா ?

June 29, 2020

லடாக் பிராந்தியத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்திய சீன எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு மேலும் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. லடாக்கின் சூசுல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.தற்போதுள்ள பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கும் வண்ணம் இந்த பேச்சுவார்த்தை அமைய உள்ளது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடைபெறும் மூன்றாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.கல்வான் மோதலுக்கு பிறகு ஜீன் 22ல் கடைசியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் இந்தியா சார்பில் 14வது கோர்ப்ஸ் படைப்பிரிவின் கமாண்டர் லெப் […]

Read More

சிறப்பு படைக்கு அவசரமாக அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல்

June 29, 2020

அமெரிக்காவின் FN Herstal நிறுவனத்திடம் இருந்து இந்திய இராணுவத்தின் சிறப்பு படைகளுக்கு அவசர நிலையில் சிறிய ரக ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. பெல்ஜிய நிறுவனமான FN Herstal-ன் அமெரிக்க பிரிவில் இருந்து 7.62 x 51 mm FN Scar துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன.இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அவரச பவரை பயன்படுத்தி 200-300 கோடிகள் செலவில் இந்த கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது. வடகிழக்கு மற்றும் மியான்மர் பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சிறப்பு படை வீரர்கள் சிறப்பாக […]

Read More

முழுமையாக ஆயுதம் தரித்து அடுத்த மாதம் இந்தியா வரும் ரபேல் விமானங்கள்

June 29, 2020

“கட்டிங் எட்ஜ் ” அதாவது இருப்பதிலேயே அதிநவீன ரபேல் விமானம் உலகின் தலைசிறந்த  வான்-வான் ஏவுகணைகளுடன் வரும் ஜீலை 27 அன்று இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக நான்கு விமானங்கள் இந்தியாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.தற்போது மேலதிக விமானங்கள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தமாக எட்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன எனினும் எத்தனை விமானங்கள் இந்தியா வரும் என தெளிவாக தெரியவில்லை. இந்த ரபேல் விமானங்களில் இந்திய விமானிகள் […]

Read More

காஷ்மீரில் அதிகளவில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் ராணுவம் !!

June 29, 2020

இன்று காலை காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகளை நமது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவினர் சுட்டு வீழ்த்தினர். காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது பயங்கரவாதிகளுடன் மோதல் வெடித்தது. இதனையடுத்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூவரும் வீழ்த்தப்பட்டனர், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. இதனுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை 116 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், அதுவும் ஜூன் மாதத்தில் மட்டுமே 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் பல்வேறு இயக்கங்களின் முக்கிய […]

Read More

பீஹார் மாநிலத்தில் பாலம் கட்டுமான பணிகளில் சீீன நிறுவனங்களுக்கு தடை !!

June 29, 2020

பீஹார் மாநிலத்தில் கங்கை நதிக்கு குறுக்கே 5.6கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டு டென்டர் விடப்பட்டது. இதில் நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன அவற்றில் இரண்டு சீன நிறுவனங்கள் ஆகும். தற்போது கல்வான் மோதல் மற்றும் லடாக்கில் பல்வேறு எல்லை பிரச்சினைகள் காரணமாக மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து சீன நிறுவனங்களை வெளியேற்றி உள்ளது. ஆகவே புதிய டென்டருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 2900கோடிகள் மதிப்புமிக்க இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த வருடம் மத்திய அரசு […]

Read More

தமிழகத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் !!

June 29, 2020

நமது இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தனது ராக்கெட்டுகளை பல ஆண்டு காலமாக ஏவி வருகிறது. பல செயற்கைகோள்கள், சந்திரயான்1 மற்றும் 2 போன்ற பல சாதனை திட்டங்களை அங்கிருந்து செயல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் நமது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் பகுதியில் அமைய உள்ளது. சொல்லப்போனால் இந்தியாவின் முதலாவது ஏவுதளமே இந்தியாவின் தென்கோடி மாவட்டத்தில் அமைய வேண்டியது ஏதேதோ காரணங்களால் ஆந்திர […]

Read More

சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட இடிந்து போன பாலம் !!

June 29, 2020

எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு உத்தராகண்ட் மாநிலத்தில் இடிந்து போன பாலத்தை மீண்டும் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளது. தற்போது இந்த பாலம் பொது போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. சீன எல்லையோரம் அமைந்துள்ள இந்த பாலம் முன்ஸ்யாரி – மிலம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி ஒரு லாரி கனரக பொருளுடன் இந்த பாலத்தை கடக்க முயன்ற போது பாலம் எடையை தாங்காமல் இடிந்து விழுந்தது. இதுகுறித்து எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் மூத்த […]

Read More

நேபாள பிரதமர் பதவி விலக சொந்த கட்சியில் வலுக்கும் கோரிக்கை ரா செயலா ??

June 29, 2020

நேபாள பிரதமர் கே.பி.ஒலி பதவி விலக வேண்டும் என அவரது நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலேயே கோரிக்கைகள் வலுத்தி வருகிறது. நேபாள பிரதமர் இல்லத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மதன் பந்தாரியின் 69ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.ஒலி தனக்கு எதிராக சதி நடப்பதாக கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில் என்னிடம் இதுவரை யாரும் நேரடியாக பேசவில்லை, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு ஒட்டலில் ஒரு தூதரகத்தின் உதவியோடு பல கூட்டங்கள் நடைபெற்றதாக […]

Read More

ட்ராலை தொடர்ந்து பயங்கரவாதிகள் இல்லாத பகுதியானது தோடா மாவட்டம்

June 29, 2020

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் ஹிஸ்புல் கமாண்டரான மசூத் என்பவனை இராணுவ வீரர்கள் வீழ்த்தினர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கடைசி பயங்கரவாதியாக இருந்த மசூத் என்பவனை இன்று நடைபெற்ற என்கௌன்டரில் இராணுவ வீரர்கள் காலி செய்தனர்.இத்துடன் தோடா மாவட்டம் பயங்கரவாதம் இல்லாத மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த மசூத் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் இணைந்து தோடா மாவட்டத்தின் கமாண்டராக மாறியுள்ளான்.இவனை வீழ்த்தியது காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படைக்கு மிகப் பெரிய வெற்றி என […]

Read More

சீன படையினருக்கு எதிராக களமிறங்க கட்டக் வீரர்கள் தயார் !!

June 29, 2020

சீன ராணுவம் தனது படையினருக்கு தற்காப்பு கலை பயிற்சிகளை வழங்குவதற்காக MMA என்று அழைக்கப்படும் கலப்பு தற்காப்பு கலை பயிற்சி வழங்க பல பயிற்சியாளர்களை வரவழைத்துள்ளது. இவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய தரைப்படை தனது கட்டக் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.இந்த கட்டக் வீரர்கள் கல்வான் மோதலின் போது நடத்திய பதிலடி தாக்குதலில் சீன ராணுவம் நிலை குலைந்து போனது குறிப்பிடத்தக்கது. கட்டக் வீரர்கள் பெல்காமில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளியில் 43 நாட்களுக்கு பயற்றுவிக்கப்படுகின்றனர். அங்கு 35கிலோ […]

Read More