Day: June 28, 2020

இந்திய ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக பாக் கொக்கரிப்பு

June 28, 2020

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாக் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக பாக் இராணுவம் கூறியுள்ளது. 850மீ பாக் எல்லைக்குள் இந்த ட்ரோன் சென்றதாகவும் அதனால் சுட்டு வீழ்த்தியதாகவும் பாக் கூறியுள்ளது. இது வரை இது போன்ற ஒன்பது ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியுள்ளது.

Read More

தனது தோல்விகளை முடி மறைக்கவே சீனா தாக்குகிறது !!

June 28, 2020

இந்தியா டுடே உடனான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மூத்த ஊடகவியலாளர் கார்டன் சாங் தனது தோல்விகளை முடி மறைக்கவே சீனா இந்தியா கஜகாஸ்தான் தைவான் போன்ற நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் இந்த நகர்வுகள் கொரோனா காரணமாக சீனாவின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் அதிருப்தியில் இருந்து திசை திருப்ப உதவும் என்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் தன்னிடமே பெரும்பாலான அதிகாரங்களை வைத்து இருப்பதால் தோல்விகளுக்கு பழிசுமத்த யாரும் இல்லை […]

Read More

சீன நடவடிக்கைகள் கவலையளிக்கிறது : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் !!

June 28, 2020

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில் சீன நடவடிக்கைகள் மிகவும் கவலையளிக்கிறது என தெரிவித்தார். சீனா கொரோனா தொற்று பாதிப்பை உலகநாடுகள் குறைக்க முயன்று வரும் நிலையில் இந்தியா தைவான் ஜப்பான் இந்தோனேசியா மலேசியா வியட்னாம் ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பல பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா தனது பங்கிற்கு சீனாவுடனான பனிப்போர் காரணமாக காய் நகர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அந்தமானை பன்னாட்டு கடற்படைகளுக்கு திறந்து விட வேண்டும்- மூத்த வல்லுநர்

June 28, 2020

மூத்த இராணுவ வல்லுநரான சுஜன் சினோய் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சீன கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கும் வகையிலும் அதற்கு சவால் விடுக்கும் வகையிலும் அந்தமான் தீவுகளை பல உலக நாடுகளுக்கு திறந்து விட வேண்டும் என்கிறார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டு இருக்கும் மிக மோசமான எல்லை பிரச்சினையை மேற்கோள் காட்டி கடலில் நாம் சீனாவை குறைத்து மதிப்பிடுகிறோம் என்று கூறுகிறார். அந்தமான் […]

Read More

இந்திய கடற்படை மற்றும் ஜப்பானிய கடற்படை ஆகியவை இணைந்து பயிற்சி !!

June 28, 2020

சீனா உலக நாடுகளை தனது மண்ணாதிக்க ஆசை காரணமாக அச்சுறுத்தி வரும் நிலையில் இந்திய மற்றும் ஜப்பானிய கடற்படை ஆகியவை இணைந்து பயிற்சி மேற்கொண்டு உள்ளன. இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் சடோஷோ சுஸூகி கடந்த 27ஆம் தேதி இந்த பயிற்சி நடைபெற்றதை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த பயிற்சியில் ஜப்பான் சார்பில் பயிற்சி படையணி ஒன்றும் இந்திய கடற்படை சார்பில் ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகியவை பங்கு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

5000 சீன வீரர்களை எதிர்த்து நின்ற 120 இந்திய வீரர்கள்-ரேசங் லா போர்

June 28, 2020

1962 போரில் ரேசங் லா என்னுமிடத்தில் இந்திய காவல் நிலையை குமான் ரெஜிமென்டை சேர்ந்த வெறும் 120 வீரர்கள் காவல் காத்து நின்றனர். நவம்பர் 18,1962, லடாக்கின் பனிமூடிய சூசுல் பகுதியில் நடைபெற்ற இந்த சண்டை வரலாற்றிலேயே இந்திய வீரர்கள் நின்று எதிர்த்து அடித்த பெருமைக்குரிய போராக உள்ளது. 13வது பட்டாலியன் குமான் ரெஜிமென்டின் சார்லி கம்பெனியை சேர்ந்த 120 வீரர்கள் மேஜர் ஷைதான் சிங் அவர்கள் தலைமையில் லடாக்கில் ஆக முக்கியத்துவம் வாய்ந்த சூசுல் வான் […]

Read More

நம்பமுடியாத வீரத்தின் விலைநிலமான கேப்டன் நெய்கிஸாகுவோ கெங்குரூஸ்

June 28, 2020

காற்று அடிப்பதால் நமது கொடி பறப்பதில்லை,அதைக் காக்க வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் மூச்சுக் காற்றால் தான் பறக்கிறது. இன்று கார்கில் வெற்றி தின கொண்டாடும் அதே வேளையில் நாம் நமக்காக வீரமரணம் அடைந்தவர்களை மறக்க கூடாது.அந்த வகையில் இன்று நாம் ஒரு வீரரின் வெற்றிச்சரித்திரத்தை காண உள்ளோம். வீரத்தின் வீரம்,நம்பமுடியாத வீரத்தின் விலைநிலமான கேப்டன் நெய்கிஸாகுவோ கெங்குரூஸ் அவர்களை பற்றி காணலாம். வீட்டில் உள்ளோர்கள் அவரை நெய்பு என்றும் , அவரின் கீழ் பணிபுரிந்து வடநாட்டு இராணுவ […]

Read More

இந்திய, ஆஸ்திரேலிய,ஜப்பானிய போர் விமானிகளுக்கு பயிற்சி வழங்க அமெரிக்கா விருப்பம் !!

June 28, 2020

சீன அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய ஆஸ்திரேலிய ஜப்பானிய போர் விமானிகளுக்கு பயிற்சி வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்து உள்ளது. இந்த பயிற்சி திட்டமானது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த பயிற்சியை இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படை தளங்களில் ஒன்றான குவாம் தளத்தில் வைத்து நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான மேற்குறிப்பிட்ட சட்ட மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த முடிவு இதை […]

Read More

விமானப்படையின் கண்காணிப்பு வளையத்திற்குள் சீனா வான் தளங்கள்

June 28, 2020

இந்திய சீன பிரச்சனை பெருகி வரும் நேரத்தில் சீனா தனது திபத் மற்றும் ஷின்சியாங் பகுதிகளில் உள்ள தளங்களில் போர்விமானங்கள்,குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை குவித்து வருகிறது.இவற்றை இந்திய விமானப்படை உன்னிப்பாக கவனித்து இதற்கு பதிலடியாக நமது பகுதியிலும் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னனி போர்விமானங்களான சுகாய்,மிக்-29 மற்றும் ஜாகுவார் விமானங்கள் 3488கிமீ நீளமுள்ள சீன எல்லையை பாதுகாக்க முன்னனி நிலைகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. சீன விமானப்படை இந்தியாவை விட நான்கு மடங்கு அதிக விமானப் பலத்தை குவித்துள்ளதாக […]

Read More

வான் பாதுகாப்பு அமைப்புகளை கிழக்கு லடாக் நோக்கி நகர்த்தும் இராணுவம்

June 28, 2020

எல்லையில் சீன விமானங்கள் மற்றும் வானூர்திகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா தனது அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணை கிழக்கு லடாக் நோக்கி நகர்த்தியுள்ளது. இந்திய எல்லைக்கு 10கிமீ தொலைவில் சீனாவின் சுகாய்-30 மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் தொடர்ந்து பறப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இந்தியா ஒரு நட்பு நாட்டிடம் இருந்து அதிக திறனுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை பெற்று எல்லையில் நிலைநிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தௌலத் பெக் ஓல்டி,கல்வான் ,பிபி14-17, ஹாட் ஸ்பிரிஙம பகுதிகள்,பங்கோங் மற்றும் […]

Read More