
நேற்று முன்தினம் காஷ்மீர் காவல்துறையினருக்கு வெடிபொருள் பதுக்கல் பற்றிய துப்பு கிடைத்தது.
இதனையடுத்து தெற்கு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டம் நானில் பகுதியை சேர்ந்த ஆதில் மக்புல் வானி என்பவனுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில் சுமார் 24கிலோ அளவிலான வெடிபொருள் பாலித்தீன் மற்றும் நைலான் கவர்களில் பதுக்கி வைக்கபட்டு இருந்தது.
காவல்துறையினர் ஆதில் வானியை விசாரித்த போது இதற்கு உதவியாக மேலும் மூவர் இருந்ததாக கூறியுள்ளான. அந்த மூவரின் பெயர்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
1) ஹூமாரா பகுதியை சேர்ந்த மொஹம்மது ஷாஹித் பட்டார்
2) நானில் பகுதியை சேர்ந்த ஃபைஸான் அஹமது
3) பிஜ்பெஹாரா பகுதியை சேர்ந்த அட்னான் அஹமது
ஆகியோர் ஆவர்.