Day: June 22, 2020

பாக் கடும் தாக்குதல்-இந்திய இராணுவ வீரர் வீரமரணம்

June 22, 2020

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி பாக் நடத்தி வரும் தாக்குதலில் ஒரு இராணவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். அதிகாலை 3.30 மணி மற்றும் 5 மணி அளவில் நௌசேரா செக்டாரின் கலால்,டீயிங் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர் பின்பு வீரமரணம் அடைந்துள்ளார். வீரவணக்கம்

Read More

சீனா விஷயத்தில் நாம் செய்யும் தவறுகள் !!

June 22, 2020

சுதந்திரம் பெற்றதில் இருந்து பாகிஸ்தானுடன் 4 போர்களையும், சீனாவுடன் 1 போரையும் 1967ல் ஒரு சிறிய அளவிலான சண்டையையும் நாம் சந்தித்து உள்ளோம். இதன் காரணமாக நமது பாதுகாப்பு கொள்கையும் ஏனோ பாகிஸ்தானை மட்டும் கருத்தில் கொண்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் சீன பிரச்சினையை தற்போது இருக்கும் அரசு உட்பட எந்த அரசுமே அதிக சிரத்தையுடன் கையாண்டதில்லை. சீனாவை நம்மிடம் இருந்து தள்ளி வைக்க மிக வலிமையான பொருளாதாரம் இன்றியமையாதது ஆகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அத்தகைய […]

Read More

பூஞ்ச் மற்றும் ராஜோரியில் பாக் படைகள் கடும் தாக்குதல்-800 முறை அத்துமீறி தாக்கியுள்ளது

June 22, 2020

கிருஷ்ன காதி மற்றும் நௌசேரா செக்டாரில் பாக் படைகள் அதிகாலை 3.30 முதல் பாக் படைகள் கடும் மோர்ட்டார் தாக்குதல் நடத்தி வருகின்றன. எல்லையை காத்து வரும் இராணுவ வீரர்கள் பாக் படைகளுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த வருடம் மட்டும் பாக் 800 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்ய தான் இது போன்ற தாக்குதலை பாக் நடத்தி வருகிறது. இந்த வருடம் நமது படைகள் பயங்கரவாத கும்பல்களுக்கு கடும் […]

Read More

ஜப்பான் அருகே சீன கடற்படையின் நீர்மூழ்கி ஊடுருவல் !!

June 22, 2020

ஜப்பான் நாட்டின் அமாமி ஒஷிமா தீவுகளுக்கு அருகே சீன கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று அத்துமீறி ஊடுருவி உள்ளது. ஜப்பானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு விமானங்கள் இதனை உறுதி செய்துள்ளன. இந்த குறிப்பிட்ட சீன நீர்மூழ்கி கப்பலானது கடலுக்கு அடியில் டோக்கோரா மற்றும் அமாமி ஓஷிமா தீவுகளுக்கு இடையேயான பகுதி வழியாக ஊடுருவி உள்ளது. ஜப்பானிய கடற்படையின் திறன் வெளிபட்டு விடும் என்பதால் அது எந்த வகை நீர்மூழ்கி என்பதை ஜப்பான் […]

Read More

இரு வேறு என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

June 22, 2020

காஷ்மீரில் நடைபெற்று வந்த இரு வேறு என்கௌன்டரில் மொத்தமாக நான்கு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். ஸ்ரீநகர் அருகே நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவத்தின் இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல் துறை இணைந்த படைப்பிரிவு வீழ்த்தியது. அதன் பிறகு சோபியான் அருகே நடத்தப்பட்ட என்கெளன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.

Read More

இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது பாதுகாப்பு இணை அமைச்சர் கிஷன் ரெட்டி !!

June 22, 2020

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் பகுதியில் வசிக்கும் கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினரை நேற்று பாதுகாப்பு இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சீனப் படைகளை திறம்பட கையாளவும் உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும் கூறினார். கல்வானில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் மற்றும் மத்திய அரசு ஆகியவை உறுதுணையாக இருக்கும் என்ற அவர் அதன் காரணமாகவே தான் கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தை […]

Read More

கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு !!

June 22, 2020

நேற்று தில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் முப்படைகளுக்கும் சிறப்பு அதிகாரங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது மேலும் முப்படை தளபதிகளுக்கு இந்திய எல்லையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தவிர சீனாவை சமாளிப்பதற்கான வேறு வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Read More