Breaking News

Day: June 21, 2020

14 இந்தோ திபெத் காவல்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி !!

June 21, 2020

இந்திய சீன எல்லை பகுதியை காவல் காக்கும் துணை ராணுவ படையான இந்தோ திபெத் காவல்படை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த படையும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது ஒட்டுமொத்தமாக 58 வீரர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய ரிசர்வ் காவல்படையை சேர்ந்த […]

Read More

எல்லை மோதல் எதிரொலி-லடாக்கிற்கு அதிக எரிபொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள்

June 21, 2020

கல்வான் பகுதியில் நடைபெற்ற பயங்கர மோதலுக்கு பிறகு கல்வான் பகுதி மற்றும் பேங்கோங் ட்சோ ஏரிப்பகுதிகளுக்கு அதிக துருப்புகளை இந்தியாவும் சீனாவும் நகர்த்தி வருகின்றன். இந்நிலையில் லடாக்கில் உள்ள படைகளின் தேவைகளுக்காக மேலதிக ஆயில் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பி வருகின்றன. படைப் பிரிவுகளின் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால் மேலதிக எரிபொருள் அனுப்பப்பட்டு வடக்கு பகுதியில் உள்ள வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த பிறகு எல்லையில் பதற்றம் […]

Read More

கல்வான் வீரருடைய உடலை சுமந்து சென்ற 65வயது தாயும், 19வயது மகளும் !!

June 21, 2020

கல்வான் பள்ளதாக்கில் நடைபெற்ற மோதலில் சுமார் 20 இந்திய வீரர்களை நாம் இழந்தோம். இவர்களில் பஞ்சாபை சேர்ந்த நாயப் சுபேதார் சத்நாம் சிங் அவர்களும் ஒருவர் ஆவார். அவருடைய இறுதி சடங்கின் போது தாயார் காஷ்மீர் கவுர் (65) மற்றும் மகள் சந்தீப் கவுர் (19) ஆகிய இருவரும் சமுதாய கட்டுபாடுகளை மீறி நாயப் சுபேதார். சத்நாம் சிங் அவர்களின் உடலை சுமந்தனர். இது காண்போரை கண் கலங்க செய்தது. திருமதி. காஷ்மீர் கவுர் கூறுகையில் “எனது […]

Read More

சோபியான் என்கௌன்டர் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள் !!

June 21, 2020

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து நடத்தி வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆபரேசன் லகிர்புர் எனும் பெயரில் இந்த ஆபரேசன் நடைபெற்று வருகிறது.சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வியாழன் அன்று காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற என்கௌன்டரில் எட்டு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மூவரும் சுற்றி வளைக்கப்பட்ட பின்னர் அவர்களது பெற்றோர்களை அழைத்து […]

Read More

நான்கு பள்ளிகளுக்கு கல்வான் வீரர்களின் பெயரை சூட்டும் பஞ்சாப் அரசு !!

June 21, 2020

பஞ்சாப் மாநில்த்தை கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. தற்போது கல்வான் பள்ளதாக்கு பகுதியில் நடைபெற்ற மோதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 4 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இவர்களின் பெயர்கள்: 1) நாயப் சுபேதார். மந்தீப் சிங்2) நாயப் சுபேதார். சத்நாம் சிங்3) சிப்பாய். குர்தெஜ் சிங்4) சிப்பாய். குர்பீந்தர் சிங். இவர்களின் சொந்த ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களின் தற்போதைய பெயர்களை மாற்றிவிட்டு இந்த வீரர்களின் பெயரை சூட்ட பஞ்சாப் அரசு முடிவு […]

Read More

இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட நீர்மூழ்கிகள் பலத்தை அதிகரிக்கும் இந்திய கடற்படை !!

June 21, 2020

இந்திய கடற்படை மிக பொறுமையாகவும் ரகசியமாகவும் தனது நீர்மூழ்கிகள் பலத்தை அதிகரித்து வருகிறது, குறிப்பாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. தற்போது சீனாவுடனான பிரச்சினைக்கு இடையே இதில் இந்திய கடற்படை கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படை அந்தமான் நிகோபார் பகுதியிலும் மலாக்கா ஜலசந்தி பகுதியிலும் தனது கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறது. சீன கடற்படையின் பலம் அதிகரித்து வரும் நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகள் இன்றியமையாததாகும்.குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் […]

Read More

காஷ்மீரில் அதிரடி : மூன்று லஷ்கர் பயங்கரவாதிகள் கைது !!

June 21, 2020

நேற்று காஷ்மீரின் சோபோர் பகுதியில் மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் ஆகியோர் இணைந்து ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

லடாக்கில் வீரமரணமடைந்த அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கும் தெலுங்கானா அரசு நிதி உதவி !!

June 21, 2020

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் பகுதியை சேர்ந்தவர் கர்னல். சந்தோஷ் பாபு . இவர் பீஹார் ரெஜிமென்ட்டின் 16ஆவது பட்டாலியனுடைய கட்டளை அதிகாரியாக இருந்தார். லடாக்கில் கல்வான் பகுதியில் சீன படையினருடன் நடைபெற்ற மோதலில் சீனர்களுடன் தீரமாக மோதி இருவரை கொன்று ஒருவனின் கண்களை குருடாக்கிய பின்னரே வீரமரணமடைந்தார். தெலுங்கானா அரசு அவரது குடும்பத்திற்கு 5கோடி ருபாய் நிதி உதவி, வீட்டு வசதிக்கான ஒரு நிலம் மற்றும் அரசு வேலை ஆகிய உதவிகளை அறிவித்துள்ளது. இந்த உதவிகளை விரைவில் […]

Read More

கர்னல் சந்தோஷ் பாபு லடாக்கில் எங்கனம் போரிட்டு வீரமரணமடைந்தார் மெய்சிலிர்க்கும் உண்மை !!

June 21, 2020

கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான வீரர்கள் லடாக்கில் சீன படையினருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியதை நாம் அணைவரும் அறிவோம். இதில் கர்னல் சந்தோஷ் பாபு போரிட்ட விதமே மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது. சீனர்களுடன் பேச சென்ற அவரை தீடிரென சரமாரியாக சீனர்கள் தாக்கினர். அப்போது அந்த எதிர்பாராத தாக்குதலிலும் சுதாரித்து கொண்ட அவர் ஒற்றை மனிதனாக வெறும் கைகளால் 3 சீன வீரர்களுடன் போரிட்டார். அதில் இருவரை கொன்று, ஒருவனின் கண்களை நோண்டி குருடாக்கிய பின்னரே அந்த மாவீரன் […]

Read More

மேலதிக 2000 ஐடிபிபி வீரர்கள் சீன எல்லைக்கு அனுப்பி வைப்பு

June 21, 2020

20 கம்பெனி இந்தோ திபத் எல்லைப் படையினர் இந்திய-சீன எல்லையில் உள்ள முன்னனி நிலைகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் உள்ள ஐடிபிபி வீரர்கள் விரைவில் முன்னனி எல்லைக்கு நகர்த்தப்பட உள்ளனர். 3488கிமீ நீளமுள்ள இந்திய-திபத் எல்லையை காவல் காக்கும் பணி இந்தோ திபத் எல்லைப் படையினர் செய்து வருகின்றனர்.எல்லை முழுதும் 180 நிலைகளை பாதுகாப்பு படையினர் காவல் காத்து வருகின்றனர்.

Read More