காஷ்மீரில் அதிரடி: 2019 புல்வாமா தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி கொலை, பழிதீர்த்த பாதுகாப்பு படையினர் !!

  • Jecinth Albert
  • June 3, 2020
  • Comments Off on காஷ்மீரில் அதிரடி: 2019 புல்வாமா தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி கொலை, பழிதீர்த்த பாதுகாப்பு படையினர் !!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அஸ்தான் மொஹல்லா பகுதியில் உள்ள கங்கான் கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற என்கவுன்டரில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அவனது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் எனும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.

இஸ்மாயில் ஆல்வி
இஸ்மாயில் ஆல்வி தனது மாமா மசூத் ஆசாருடன்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி இஸ்மாயில் ஆல்வி என்பவன் ஜெய்ஷ் இ மொஹம்மது இயக்க தலைவன் மசூத் ஆசாரின் மருமகன் ஆவான், இவனுக்கு புல்வாமா தாக்குதலில் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இவனுடன் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெய்ஷ் இயக்கத்தில் இணைந்த, புல்வாமாவில் உள்ள கரிமாபாத் கிராமத்தை சேர்ந்த ஸாஹித் மன்சூர் வானி மற்றும் ஷோபியான் பகுதியில் உள்ள ஸீராயூன் கிராமத்தை சேர்ந்த மன்சூர் அஹமது கர் ஆகிய இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் மரணத்திற்கு அஞ்சலி ஆக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஜெய்ஹிந்த் !!